வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் முத்துராஜவல ஈரவலயம்?

முத்துராஜவல ஈரநில வலயத்தின் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சொந்தமான பகுதியை வனப் பாதுகாப்பு திணைக்களத்துக்கு வழங்குவது தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

அதன்பின்னர் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமென மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னர் அந்த அதிகாரசபைக்கு சொந்தமான பகுதியை பாதுகாக்கப்பட்ட வலயமாக மாற்றும் சட்டபூர்வ அதிகாரம் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிடைக்கும். மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் வலயத்தை வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்குவது சம்பந்தமான பேச்சுவார்த்தை அண்மையில் இடம்பெற்றுள்ளது.

காணி திணைக்களம், நில அளவைத் திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஆகிய அரச அதிகாரிகளுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலுக்கு அமைவாக, இந்த ஆண்டின் இறுதிக்குள் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சொந்தமான பாதுகாப்பட்ட பகுதி வனப் பாதுகாப்பு திணைக்களத்துக்கு உரிமையாவதுடன், அது வனஜீவராசிகள் வலயமாக பாதுகாக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு