ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு குழு கூட்டம் இன்று மீண்டும் இடம்பெறுகிறது.
இன்று பிற்பகல் 3.00 மணிக்கு அலரி மாளிகையில் கூட்டம் ஆரம்பமாவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கை சம்பந்தமாக யோசனைகளை முன்வைப்பதற்கு அந்தக் கட்சியின் 14 அமைச்சர்கள் உள்ளடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.