ஈரான் உயர்மட்டக் குழு வருகை

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லறிஜனி தலைமையிலான குழு நேற்று இரவு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

இவர்கள் கடந்த 15ஆம் திகதி ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து புறப்பட்டு, வியட்நாமுக்கு சென்று பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

சபாநாயகர் அலி லரிஜனி இன்றும் நாளையும் இலங்கையில் தங்கியிருப்பதுடன், இந்தக் காலப்பகுதியில் பிரதமர், ரணில் விக்ரமசிங்கவையும், சபாநாயகர் கரு ஜயசூரியவையும் அவர் சந்திக்கவுள்ளார்.

இரண்டு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, இருதரப்பு நல்லுறவு தொடர்பிலான விடயங்களை மேம்படுத்துவது குறித்து இந்த பேச்சுக்கள் நடாத்தப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு