தங்கவரி அதிகரிப்பால் வர்த்தக நடவடிக்கை பாதிப்பு

இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் சுங்கவரி 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக தமது வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்க வர்த்தக சமூகத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் இந்த முடிவினை மீள்பரிசீலிக்குமாறு வர்த்தக சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்மூலம் நுகர்வோர் தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்வதை மட்டுப்படுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வரி அமுலுக்கு வந்துள்ள நிலையில், தங்க ஆபரணங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தால் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுவதாக தங்க விற்பனை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் இருந்து நேரடியாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவதனால், வரி அதிகரிப்பு காரணமாக, எதிர்காலத்தில் ஆபரணங்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளகதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு