இலங்கையின் தேசிய ஏற்றுமதி வினைமுறை தொடர்பான இறுதி அறிக்கை தயாராகியுள்ளது.
இது குறித்த ஆவணம் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பொது மற்றும் தனியார் துறையை சேர்ந்த கைத்தொழில் தலைவர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் தொடர்ச்சியாக இடம்பெற்ற கருத்து பரிமாற்றங்களை அடுத்து இந்த இறுதி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய ஏற்றுமதி வினைமுறை அமைப்பின் செயற்பாடுகளை சிறந்த முறையில் மேற்கொள்ளும் நோக்கில் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆலோசனை குழு ஒன்றை ஸ்தாபித்துள்ளது. இந்த குழுவின் செயற்பாடுகள் 3 வருடத்திற்கு ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்றுமதி அபிவிருத்தி நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையிலான ஆலோசனைகளை இந்த குழுவினர் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்குவர். ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை இந்த குழுவினர் ஆராய்ந்து, அதனை நிவர்த்தி செய்வதற்கான மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.