தற்போது இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் தரப்புடன் இனியும் இணைந்து செயற்பட முடியாதென ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வெசாக் போயத் தினத்துக்குப் பின்னர் புதிய தேசிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும், ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள தேசிய சபையை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தி, நாட்டை உண்மையாக நேசிக்கின்றவர்களை ஒன்றுதிரட்டி மக்களை அணித்திரள வைப்பதே இந்தத் தேசிய வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நல்லதொரு கலாசாரம் மற்றும் நிலைத்திருக்கும் அபிவிருத்தியை ஏற்படுத்துவதே தமது ஒரே நோக்கம் எனவும் அத்துரலிய ரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.