பாடசாலை மாணவனைத் தாக்கிய பஸ் சாரதி

வவுனியாவில் பாடசாலை மாணவன் ஒருவன் மீது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி, நடத்துனர், மற்றுமொரு நபர் ஆகியோர் இணைந்து நேற்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, பூவரசன்குளம் ஊடாக சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதி, நடத்துனர் ஆகியோரே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பஸ்ஸ_ம் தனியார் பஸ்ஸ_ம் ஒன்று வீதியில் போட்டி போட்டு மிக வேகமாக பயணித்துள்ளது. இது தொடர்பாக வீதியால் சென்ற மாணவன் சாரதியிடம் வினவிய போது, சாரதிக்கும் மாணவனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சாரதி, நடத்துனர் மற்றுமொரு நபர் ஆகியோர் இணைந்து மாணவன் மீது தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

அதேவேளை, தாக்குதல் நடத்திய சாரதி, நடத்துனர் ஆகியோர் மது போதையில் இருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு