இன்று விஷேட கலந்துரையாடல்

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அந்த குழுவை அங்கத்துவப்படுத்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் மற்றும் மேலும் சில முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோர் அந்த பதவிகளில் இருந்து விலக வேண்டும் எனவும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அந்த குழுவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி மற்றும் லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் லண்டனில் வைத்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாட எதிர்பார்ப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு