காலாவதியாகிவிட்ட இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது காலாவதியான ஒரு பொருள் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததுள்ளார்.

2020ஆம் ஆண்டில் ஓய்வுபெறமாட்டேன் என்றும் நாட்டிற்காக செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் அதிகமாக உள்ளதாகவும் ஜனாதிபதி மட்டக்களப்பில் நடைபெற்ற மே தின கூட்டத்தின் போது கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓய்வுபெற பெறத்தேவையில்லை, அவரை இப்போதைக்கும் நாட்டு மக்கள் ஓய்வுக்கு அனுப்பிவிட்டார்கள் என்றும் ஜனாதிபதி இப்போது காலாவதியான ஒரு பொருள் என்றும் தெரிவித்தார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு