மீண்டும் மண்சரிவு அபாயம்?

மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையினால் மண்சரிவு அபாயம் இருப்பதனால் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 48 மணிநேரத்தில் ஹல்துமுல்ல வீதியின் பல பகுதிகளிலும் ஹப்புத்தளை பேரகல, பதுளை எல்ல – வெல்லவாய வீதிகளிலும் மண்சரிவுகள் மற்றும் பாறை சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே, இப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், ஹப்புத்தளை வீதியில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன போக்குவரத்திற்கும் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு