அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்திற்குத் தயார்

வடக்கு மாகாணத்திலுள்ள யாழ். போதனா வைத்தியசாலை நீங்கலாக அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் 14ஆம் திகதி 24 மணிநேர அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண சங்கத்தின் இணைப்பாளர் வைத்திய கலாநிதி த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாமையைக் கண்டித்தே குறித்த அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், குறித்த வேலைநிறுத்தத்தின் போது, அவசர சிகிச்சை அனைத்து வைத்தியசாலைகளிலும் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு