தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயார்

தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

12 வருட காலமாக நிலவிவரும் தபால் ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விஷேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதாக அதிகாரிகள் உறுதிமொழி வழங்கியுள்ள போதிலும், இதுவரை அந்த உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்படாமையினால் அடுத்த இரண்டு வாரத்திற்குள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் எம்.கே. காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்காமையினால் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள உரிய நேரத்திற்கு மாத்திரம் வேலை செய்யும் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு