2020ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தொடர்பில் அமைச்சர் ராஜித சேனரத்ன மற்றும் கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகிய இருவரும் இருவேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற இரண்டு ஊடகவியலாளர் சந்திப்புக்களின் போதே அவர்கள் இருவரும் இவ்வாறு இருவேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மே தின நிகழ்வுகளின் பின்னர் இது தொடர்பில் தன்னுடன் கலந்துரையாடியதாகவும் இதன்போது பிரதமர் பொது வேட்பாளர் ஒருவர் தொடர்பில் தெரிவித்ததாகவும் அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ள நிலையில், பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவரையே தேர்தலில் போட்டியிட வைப்பதாக தெரிவித்துள்ளார்.