எரிபொருளுக்கான விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து முச்சக்கர வண்டிக்கான பிரயாண கட்டணத்தை அதிகரிப்பதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பயணத்தின் முதல் கிலோமீற்றருக்கு 10 ரூபாவால் விலையை அதிகரிக்க முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாகவும், எனவே, இதுவரை காலமும் 50 ரூபாவாக குறைந்தபட்ச விலை கட்டணம் இன்று முதல் 60 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.