அரசாங்கத்தின் கொள்கை தந்திரமானதே – பீரிஸ்

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை ஒரு தந்திரமான வேலைத்திட்டமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடியானது இலங்கையில் மாத்திரமல்ல முழு தெற்காசியாவிலும் நடந்த மிகப் பெரிய மோசடி எனவும், இதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. பிரதமருக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வரும் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் மாறி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு நியாயத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு