கல்வி வேலைத்திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெறத் தீர்மானம்

13 வருட உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரச நிறுவனங்களைப் போன்று அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்காக முன்வந்த நிறுவனங்களுக்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நன்றி தெரிவித்துள்ளதுடன், நாட்டின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

13 வருட உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அரச மற்றும் தனியார் நிறுனங்களில் அதிகாரிகள் கலந்து கொண்னர்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 26 தொழில் கற்கைநெறிகள், பாடசாலை கற்றைநெறிகளில் சேர்க்கப்படவுள்ளது. க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மற்றும் சித்தி பெறத் தவறிய மாணவர்கள், இந்தத் தொழில் கற்கைநெறியின் கீழ் கல்வியை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதுடன், இதன் முதற்கட்டத்தின் கீழ் 42 பாடசாலைகளை சேர்ந்த 2,400 மாணவர்கள் தற்போது கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு