நீதிமன்றங்கள் சுயாதீன நிறுவனங்களாக கட்டியெழுப்பட்டுள்ள நிலையில், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைள் விரைவுப்படுத்தப்பட வேண்டுமென நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய நிலையில், வழக்கு விசாரணைகளில் ஏதேனும் அநீதி இழைக்கப்படுமாயின் அதற்கு எதிராக தாம் முன்னிற்பதாகவும் நீதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.