வட இந்தியாவில் புழுதிப் புயல் – 40 பேர் பலி

வட இந்தியாவை பாரிய சூறாவளி தாக்கியுள்ளதில் இதுவரை 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

வீசிய சூறாவளியின் காரணமாக டில்லியில் புழுதி புயல் வீசியுள்ளதுடன், கடும் மழையும் பெய்துள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதாகவும், புழுதி புயல் மற்றும் கடும் மழை காரணமாக 40 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 40 பேர் வரையில் பலியாகியுள்ளதுடன், இந்தியாவின் உத்திரபிரதேசஸ், ஆந்திரபிரதேஸ், ராஜஸ்தான் மற்றும் டெல்கி ஆகிய பகுதிகளே அதிக பாதிப்புக்களை சந்தித்துள்ளதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு