சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கொண்டுவர திட்டம்

சமுர்த்தி வங்கியை, இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டுவருவதற்கு இடமளிக்கப்போவது இல்லையென சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற அமைச்சரிடம், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், எந்தவொரு காரணத்துக்காகவும் இந்த விடயத்தை தான் அனுமதிக்கப்போவது இல்லை எனவும், இதுதொடர்பில் எவரும் கவலை கொள்ளத் தேவையில்லை என்பதுடன், சமுர்த்தி வங்கி ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது தனது கடமை எனவும், முகாமைத்துவ மட்டத்தில் உள்ளவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி வங்கியை மீண்டும் நஷ்டமடைய வைக்கும் எண்ணம் தனக்கில்லை எனவும், சிறப்பாக செயற்பட்டு இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த 6ஆம் திகதி சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில், சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு