எரிபொருள் மோசடிகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மோசடிகள் இடம்பெறுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வார்களென அச்சபையின் தலைவர் ஹசித் திலகரட்ன தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால், திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 54 எரிபொருள் நிரப்பு நிலையங்களில், 10 நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மன்னார், பாணந்துறை, வவுனியா, யாழ்பாணம் மற்றும் கண்டி உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் மோசடி இடம்பெறுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு