மீனவர்கள் போராட்டம்

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தென், மேற்கு மற்றும் வடமேல் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தொழில் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அனைத்து இலங்கை பொது மீனவர்கள் சம்மேளனத்தின் தேசிய இணைப்பாளர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் இறங்குதுறைகளுக்கு அருகில் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தில் சிலாபம், புத்தளம், ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் பங்குபற்றியிருப்பதாகவும், இந்த போராட்டத்தின் காரணமாக பல மீன்களின் விலைகள் உயர்ந்துள்ளதாகவும், குறிப்பாக 300-350 ரூபாவிற்கு இடையில் விற்பனை செய்யப்பட்ட கெலவல்லா மீன், கிலோகிராம் 600 ரூபாவாக அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு