யாழில் பயிற்சி செயலமர்வுகள்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உயர்தர கணக்கீட்டு ஆசிரியர்களுக்கும் ஆசிரிய சேவைக்கால ஆலோகசர்களுக்கும் பயிற்சி செயலமர்வுகள் இடம்பெறவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் கணக்கீட்டு பாடத்திட்டத்தின் செயற்திட்ட தலைவர் எஸ்.கே.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

கணக்கீட்டு பாடத்தின் புதிய பாடத்திட்டம் தொடர்பாகவே இச்செயலமர்வுகள் இம்மாதம் 21ஆம் 22ஆம் திகதிகளில் யாழ். மருதனார்மடத்திலுள்ள வடமாகாண கல்வி திணைக்களத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் இம்மாதம் 23ஆம் திகதி கா.பொ.த சாதாரண தரத்தின் வணிகக் கல்வியும் கணக்கீடும் தொடர்பான செயலமர்வு வடமாகாண கல்வி திணைக்களத்தில் இடம்பெறவுள்ளதாகவும், இதில் வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களும் பங்குபற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு