தலைப்பிறை மாநாடு

புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் புதன் கிழமை மாலை இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அதன்படி ஹஜ்ரி 1439ஆம் ஆண்டுக்கான ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் புதன்கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இடம்பெறவுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். அன்றைய தினம் தலைப்பிறை தென்பட்டால் எதிர்வரும் வியாழக்கிழமை முதலாவது நோன்பு ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு