பேருந்துக் கட்டண சீர்திருத்தத்திற்கு அரசு இணக்கம்

பேருந்து கட்டண சீர்திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான யோசனை இன்றைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் மற்றும் அரச பேருந்து கட்டணங்கள் எந்தளவு உயர்த்தப்படவுள்ளது என்பது தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், பேருந்து சங்கங்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ் விதானவுக்கு இடையே நேற்றைய தினம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போது, கட்டண அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பேருந்து கட்டண தேசிய கொள்கைக்கமைய ஜூன் மாதம் முதலாம் திகதி வருடாந்தம் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், எரிபொருள் விலை அதிகரிப்புடன் 20 சதவீத பேருந்து கட்டண அதிகரிப்பை எதிர்பார்ப்பதாகவும் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கோரியிருந்தார்.

எனினும் இதுதொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டுமென தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு