சீனா நிதியுதவி

சீன அரசாங்கம், மத்திய நெடுஞ்சாலை கட்டுமான பணிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.

அலரிமாளிகையில் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கையிலுள்ள சீன தூதுவருக்குமிடையிலான சந்திப்பின்போது சீன தூதுவர் பிரதமரிடம் இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி, சீன வங்கியான எக்ஸிம் வங்கியின் மூலம் கடனாக வழங்குவதற்கு தமது நாட்டு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக தெரிவித்த சீன தூதுவர், இதனை பெற்றுக்கொள்வதற்கான சட்டம் மற்றும் நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு