இரண்டு வருடங்களில் 03 வர்த்தக வலயங்கள்

ஹம்பாந்தோட்டை வர்த்தக வலயத்துக்கு அப்பால் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் 3 வர்த்தக வலயங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பிங்கிரிய, வெலிகம மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் இந்த வர்த்தக வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக அரச முகாமைத்துவ உதவி பணியாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட 4511 பேருக்கான நியமனக் கடிதங்களை நேற்றைய வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போது பிரதமர் தெரிவித்துள்ளார்.

1978ஆம் ஆண்டு தொடக்கம் 1992ஆம் ஆண்டு வரை இந்நாட்டிற்குள் 04 வர்த்தக வலயங்களே அமைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 2 வருடங்களுக்குள் 3 வர்த்தக வலயங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு