சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜெருசலேம் நகரில் புதிய தூதரகம் ஒன்றை அமெரிக்கா திறந்து வைத்ததன் தொடர்ச்சியாக காஸா எல்லையில் நடைபெற்ற மோதல்களில் குறைந்தது 43 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இவர்கள் உயிரிழந்த அதேவேளை, சுமார் 1,800 பேர் காயமடைந்துள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் காஸா எல்லையில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் இஸ்ரேலிய படையினரை நோக்கி கற்கள் வீசப்பட்ட நிலையில், அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையே இடம்பெற்றுவரும் மோதல்களில் இந்த தாக்குதல் சம்பவத்தை இரத்தம் சிந்திய நாள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக கடந்த வருடம் அமெரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த விடயம் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.