இரணைதீவு மக்கள் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, இரணைதீவில் போராடும் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இன்றையதினம் விஷேட குழுவொன்று குறித்த பகுதிக்கு வருகைதந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் தமக்காக நாடாளுமன்றில் குரல் கொடுத்தது மட்டுமல்லாது அதை செயற்படுத்தியும் காட்டிய டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தாம் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதாக இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்றில் இரணைதீவு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுத்திருந்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு குறித்த பகுதியை ஆராய்வதற்காக விஷேட குழு ஒன்றை அனுப்பவதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்திருந்ததன் பிரகாரமே குறித்த விஜயம் இன்றையதினம் நடைபெற்றுள்ளது.

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், தமக்கான வாழ்வியலுக்கான நிரந்தர தீர்வு குறித்த குழுவினது வருகையின் ஊடாக கிடைக்குமென எதிர்பார்த்துக் காத்திருக்கும் இரணைதீவு மக்கள் குறித்த குழு வருகை தருவதற்காக பாடுபட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவை தமது பகுதிக்கு மீண்டும் ஒரு தடவை வருகை தருமாறும் அவரது வருகையை தாம் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு