இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஃப்ரென்ஞ் பகிரங்க டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் முன்னிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விளையாடுவாரென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குழந்தையைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட ஆரம்பித்த செரீனா, அதற்கு போதிய தயார் நிலையில் இல்லாமையை சுட்டிக்காட்டி, மெட்ரிட் மற்றும் ரோம் தொடர்களில் இருந்து வெளியேறிய போதிலும், அவர் தற்போது தயார் நிலையில் இருப்பதாகவும், ஃப்ரென்ஞ் பகிரங்க டென்னிஸ் தொடரில் அவர் விளையாடுவார் என்று நம்புவதாகவும் அவரது பயிற்றுவிப்பாளர் பெற்றிக் மோராடோக்லோ தெரிவித்துள்ளார்.
36 வயதான செரீனா வில்லியம்ஸ் 23 தடவைகள் க்ராண்ட்ஸ்லம் பட்டங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.