சாதனை படைத்தது பாகுபலி-2

இந்திய திரையுலகின் பல்வேறு சரித்திர சாதனைகளை ‘பாகுபலி-2’ படம் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 28ஆம் திகதி வெளிவந்த இந்த படம் 03 நாட்களில் ரூ.500 கோடியை வசூலித்து சரித்திர சாதனை படைத்தது.

விரைவில் 1000 கோடி ரூபாயை எட்டும் என்ற கணிப்பில் அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்திய படங்களிலேயே அதிக வசூலை எட்டிய படம் என்ற பெருமையை பாகுபலி-2 06 நாட்களிலேயே பெற்றுள்ளது.

பாகுபலி-2 வெளியாகி 06 நாட்கள் கடந்துள்ள நிலையில், இப்படம் 792 கோடி ரூபா வசூலித்து இந்தியா திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அமீர்கான் நடிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பிகே’ படம்தான் இதுவரை அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையை கொண்டிருந்தது. அந்த படம் ரூ.743 கோடி வசூலித்திருந்தது.

தற்போது அந்த சாதனையை பாகுபலி-2 தகர்த்தெறிந்துள்ளது. தங்கல், பாகுபலி, பஜ்ரங்கி பாய்ஜான், தூம்-3, சுல்தான்இ ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு