மதுபான நிலையத்திலிருந்து சடலம் மீட்பு (Photo)

யாழ்ப்பாணத்திலுள்ள மதுபான நிலையத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ். இராசாவின் தோட்ட வீதியிலுள்ள மதுபான நிலையத்திலிருந்தே குறித்த ஆணின் சடலம் இன்று காலை யாழ். பிராந்திய பொலிசாரால் மீட்கப்பட்டது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் குறித்த மதுபான நிலையத்தில் வேலை செய்யும் ஏழாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கௌரீசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ். பிராந்திய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்கென யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு