இலங்கையிலிருந்து தங்கம் கடத்தல் – இந்திய அதிகாரிகளால் பறிமுதல்

இலங்கையில் இருந்து இராமேஸ்வரத்துக்கு படகொன்றில் கடத்தி வரப்பட்ட 04 கிலோ தங்கக்கட்டிகளை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கடல்வழியாக படகுமூலம் தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதாக இந்திய சுங்கத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை பாம்பன் கடல் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்துள்ளனர்.

இதன்போது மீன்பிடி படகில் வந்த 02 பேர் தப்பிச் செல்ல முற்பட்ட சமயம் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடத்தல்காரர்கள் பொதி ஒன்றை கடல் பகுதியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சுங்கத்துறையினர் அந்தப் பொதியை மீட்டு சோதனை செய்தபோது அதில் 40 தங்கக்கட்டிகள் இருந்ததாகவும், 04 கிலோ எடை கொண்ட இந்த தங்கக்கட்டிகளின் இந்திய ரூபாவில் ஒரு கோடியே 20 லட்சமென தமிழகச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு