வட மாகணத்திற்குள் மே 18ஆம் திகதி வடமாகாண கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள போவதாக சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அரசு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மொனராகல, படல்கும்புர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.