மயிலிட்டியில் கப்பலிலிருந்து பொருட்களை எடுத்தவர்கள் கைது (Photos)

மயிலிட்டி கடற்கரையோரமாக அநாதரவாக நீண்ட நாட்களாக காணப்படும் கப்பலில் இருந்த பொருட்களை எடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த ஐவர் நேற்று மாலை காங்கேசன்துறை விஷேட குற்ற பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவது, கடற்கரை பார்க்க வந்த இளைஞர்கள் கரையில் இருந்த கப்பலை பார்க்க சென்றுள்ளனர். அங்கிருந்த பொருள்ளொன்றை அனுபவம் இல்லாமல் சாதாரண விளையாட்டு வெடி என நினைத்து செயற்படுத்தியுள்ளனர். அது மேலே சென்று பிரகாசமாக வெடித்துள்ளது. இதனை பார்த்தவுடன் அங்கு இருந்த இளைஞர்கள் அதேபோல் உள்ளவற்றை தாம் கொண்டு வந்த முச்சக்கர வண்டியில் கொண்டு செல்ல முற்பட்ட போது அங்கிருந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு