எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

மாங்குளம், ஒட்டுருத்தகுளம் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இன்று (21) அதிகாலை 3.30 மணியளவில் வேன் ஒன்றில் வருகை தந்த இருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த ஊழியரை கூரிய ஆயுதத்தைக் காட்டி மிரட்டி ஒரு இலட்சத்து 86 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு