1024 பேர் இடப்பெயர்வு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 1024 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 13,314 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்காலிகமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ள நிலையில், சில மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இரத்தினபுரி, களுத்துறை, காலி, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை அடுத்து வரும் சில தினங்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு