தங்கக் கட்டிகளுடன் இருவர் கைது

4.7 மில்லியன் பெறுமதியான தங்கக்கட்டிகளை சட்டவிரோதமாக எடுத்துவந்த இருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து இன்று (21) காலை வருகை தந்த மாத்தறை பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரும், மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

700 கிராம் எடையுடைய 4,760,000 பெறுமதியான தங்கக் கட்டிகள் போலி பெல்ட்களிலும் பாதணியின் கீழும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு