சர்வதேச தடயவியல் நிபுணர்கள் வருகை

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில், நாளையும், நாளை மறுதினமும் கொழும்பில் நடைபெறவுள்ள அவசரகால உயிரிழப்புகள் தொடர்பிலான முகாமைத்துவத்துக்கான, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கொள்கை அபிவிருத்தி தொடர்பிலான மூன்றாவது ஆசிய மாநாட்டில் பங்கேற்பதற்காகவே இவர்கள் கொழும்பிற்கு வருகை தந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேஷியா, நேபாளம், பாகிஸ்தான், கிழக்கு தீமோர், வியட்நாம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்கள் இந்த இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதுடன், பங்கேற்பாளர்கள் பிராந்திய அனர்த்த முகாமைத்துவ முகவர் நிறுவனங்கள், செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இந்த துறையில் பணியாற்றும் அமைப்புகளுடன் இணைந்து அமர்வில் பங்கேற்கவுள்ளனர்.

அவசர நிலைமைகளின்போது உயிரிழப்புகளை முகாமைப்படுத்துவது தொடர்பிலான கொள்கைகையை வகுப்பதும், உத்திகளை கண்டறிவதுமே இந்த மாநாட்டின் நோக்கமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு