ஆவா முக்கியஸ்தர் கைது

யாழ். நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆவா குழுவின் முக்கிய நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று (21) கைது செய்துள்ளனர்.

யாழ். தாவடிப் பகுதியில் வைத்து கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வைத்து 8 பேர் கொண்ட ஆவா குழுவினர் இருவரை சாராமாரியாக வெட்டினர். அந்த வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இவரிடமிருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் பின்னர் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு