வெளவால்களால் 9 பேர் பலி

நிப்பா தொற்று காரணமாக இந்தியாவின் கேரளாவில் ஒன்பது பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், இந்த நோய் தொற்று அறிகுறிகளுடன் மேலும் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மிருகங்களிடம் இருந்து தொற்றும் இந்த நோய்க்கான உறுதியான மாற்று மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், இந்த நோய் தொற்றுக்குள்ளாகும் நோயாளிகளின் இறப்பு விகிதம் 70 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மிகவும் பாரதூரமான பத்து தொற்று நோய் பட்டியலில் நிப்பாவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த தொற்று, வெளவால்களால் பரவியுள்ளதாக கேரள மாநிலத்தில் சுகாதார செயலாளர் ராஜீவ் சந்தனந்தன் தெரிவித்துள்ளார். இந்த தொற்றுக்கு உள்ளாகி மூன்று பேர் மரணித்த வீட்டில் இருந்து சுகாதார அதிகாரிகள், வெளவால் உண்ட மாம்பழங்களை கைப்பற்றியுள்ளனர். அந்த பழங்களை ஆய்வுக்கு உட்படுத்திய போது, நிப்பா நோய் அவற்றின் மூலமே பரவியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு