பொய்ச் செய்திகள் வெளியிடப்படுகின்றன

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குழு ஒன்று அரசாங்கத்தில் இருந்து விலகவிருப்பதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானதென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட வேண்டும் என்பதற்காக சிலர் அவ்வாறான கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும், ஆனால் இவை உண்மையில்லை. விரைவில் இதற்கான பதில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு