17.1 பில்லியன் டொலருக்கான ஏற்றுமதி எதிர்பார்ப்பு

இந்த வருடத்தில் 17.1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதி மற்றும் சேவைகளை செய்யும் இலக்குடன் அரசாங்கம் செயற்படுவதாக சர்வதேச வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலீட்டு சபையினால் பியகம ஏற்றுமதி வலயத்தில், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்ததுடன்;, ஏற்கனவே, உற்பத்தி செய்யப்பட்ட ஏற்றுமதிக்காக தயாரிக்கும் நிலையம் ஒன்று ஜேர்மனியின் உதவியுடன் கிளிநொச்சியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்காக நவீன தொழில்நுட்ப முறைமைகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன்மூலம், ஏற்றுமதி மற்றும் சேவை வழங்கல் போன்ற பணிகளை இலகுவாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு