இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய நிறுவனம் ஒன்றிடமிருந்து 02 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே.மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திசாநாயக்க ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.