முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கணை பகுதியில் இன்று அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளால் ஆயுதம் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட இடத்திலேயே குறித்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார், அதிரடிப்படையினர் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டுள்ளனர்.