சீரற்ற காலநிலை காரணமாக தற்போதைய நிலையில் 14,432 குடும்பங்களைச் சேர்ந்த 52,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன், 20 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், 956 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையில், 137 பாதுகாப்பான இடங்களில் 12,132 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.