2.39 கிலோகிராம் ஹெரோயினுடன் மாலைதீவு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
33 வயதுடைய மாலைதீவு பிரஜை ஒருவரையே பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இவ்வாறு கைது செய்துள்ளதுடன், 24.4 மில்லியன் பெறுமதியான 2.39 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.