கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு

2018-2019 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிகளவு இலாபம் அடைந்ததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒப்பந்த வீரர்கள் 33 பேரை தவிர டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடும் அனைத்து வீரர்களுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு