தீப்பெட்டி தொழிற்சாலைகளை மூடத் தீர்மானம்

தீப்பெட்டிகள் உற்பத்திக்கு தேவையான மருந்துகள் இல்லாமை காரணமாக இன்று முதல் தீப்பெட்டித் தொழிற்சாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பான தீப்பெட்டிகள் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் தலையிட்டு இதற்குத் தேவையான மருந்துகளை சரியான முறையில் கொண்டுவராமைக் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தீப்பெட்டி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டவுடன், அரசாங்கம் மருந்துப் பொருட்களைக் கொண்டுவந்து தருவதாக குறிப்பிட்டிருந்த நிலையில், இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென்றும், இதனால் நாட்டில் தீப்பெட்டி பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க முடியாதென்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு