முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்ற முறைமை தொடர்பில், தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் ஒழுங்கமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.
அதன் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக, குறித்த அமைப்பின் செயலாளர் பேராசிரியர் ச்சன்ன ஜயமன்ன இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் பங்கேற்காத போதும், வடமாகாண முதலமைச்சருக்கு பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரிகள் போன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் செயற்பட்டதாகவும், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட பல்கலைக்கழக மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.