இரகசியப் பொலிஸாரால் தான் கைது செய்யப்படுவதை தடை செய்து உத்தரவிடுமாறு கோரி எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஜூன் மாதம் 8ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
அந்த மனு இன்று (23) பிரியந்த ஜயவர்த்தன மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி முர்து பெர்ணான்டோ இந்த வழக்கை விசாரிக்க விரும்பாத காரணத்தால் மனுவை பிற்போடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.